நண்பேன்டா... ;)

22 January, 2012

கனவு இல்லம் கட்டலாமா ?

வீடு... 






ஒவ்வொரு உயிரினமும் வாழ்க்கைத்துணைக்கு அடுத்தபடியாக அதிகம் விரும்புவது அதனுடைய வீட்டைத்தான்...





நமது வாழ் நாளின் மிக நீண்ட பகுதியை பெரும்பாலும் வீட்டிலேயே கழிக்கிறோம்... அதுவும் வாடகை வீட்டில் தான் பெரும்பாலும்

வாழ்கையை நகர்த்த வேண்டி இருக்கிறது...இதற்கு முக்கிய தேவைகளாக நாம் கருதுவது தேவையான வருமானம், நிலையான பணியிடம், பாதுகாப்பான சூழல்...





வேலைக்காக புலம் பெயர்ந்து வேறொரு மாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோ வாழும் மத்திய தர வர்கத்தினருக்கு வருமானம் போதுமான அளவு கிடைத்தாலும், சொந்த வீடு வாங்குவதில் நிறைய தயக்கம் இருக்கிறது...இதற்கு முக்கிய காரணிகள் மேற்கூறியவை தான்...





பொறியியல் அல்லது மென்பொருள் கட்டமைப்பில் பணி புரிபவர்கள் தங்களது கனவு இல்லத்தை சொந்த ஊரில் கட்டுவதா இல்லை நாம் பணிபுரியும் இடத்தில கட்டுவதா என்ற குழப்பம் நிச்சயம் இருக்கும்...





பொதுவாக கனவு இல்லம் கட்டும் போது அதற்காக நாம் செலவிடும் தொகை அவர்களது வருமானத்தை மீறியதாகவே அமைந்துவிடுவது இயல்பு... ஒருவன் 8 லட்சம் ஆண்டு வருமானம் பெரும் போது அவனது கனவு இல்லம் 30 லட்சம் முதல் 50 லட்சம் பெறுமானதாகவே அவன் தேட முற்படுகிறான்..இதற்கு அவனது வாழ்வாதாரமும் ,அன்றாடம் கவனித்துவரும் மற்றவர்களின் மேம்பட்ட வாழ்க்கை தரமும், தற்பொழுதுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையும் அவனை மனரீதியாக தூண்டுகின்றது என்பதே உண்மை..






கனவு இல்லம் கட்டுவதில் இவ்வளவு குழப்பங்கள் மனதில் இருக்கும் போது ....வீடு வாங்கினாலும் அது நமக்கு பிடித்த வாழ்விடமாக அமைப்பது அதைவிட மிகப் பெரிய சவாலாக இருக்கிறது...





முதலில் வீடு எங்கே கட்டுவது என்ற விடுகதைக்கு விடை காண்போம்.....





நம் வாழ்கையின் முதல் இருபது வயது பெற்றோருடன் வாழ்கிறோம்...வேலைதேடி வெளியூரில் தஞ்சம் அடைந்து..நிரந்தரப்பணியில் அமர்ந்தவுடன், அடுத்த சிந்தனை வீட்டை இங்கே கட்டலாமா..சொந்த ஊரில் கட்டலாமா?? என்ற கேள்விதான்..





எனது அனுபவத்தில் நான் உணர்ந்த உண்மைகள் ...இது உங்களுக்கும் சில நேரங்களில் பொருந்தலாம்...





௧) கனவு இல்லத்தை ஒரு சொத்தாக மட்டும் பார்த்தால்....எங்கே கட்டினாலும் அதன் மதிப்பு ஒன்று தான்....

௨) கனவு இல்லம் எப்பொழுது உங்கள் உணர்வுப்பூர்வமாக என்னப்படுகிறதோ அப்பொழுது அது உங்கள் அருகிலேயே இருப்பது நல்லது...

௩) சொந்த ஊரில் கட்டப்படும்போது அதை எவ்வளவு தூரம் அதை உபயகப்படுத்துகிறீர்கள் என்பதும் முக்கியம்....

௪)வேலையில் சேர்ந்து திருமணம் ஆனவுடன் பெற்றோர்கள் தனிமரம் ஆக்கப்படுகிறார்கள்...இந்த மாதிரி சூழ்நிலையில் நமது இல்லம் சொந்த ஊரில் இருந்தால் பெற்றோர்களுக்கு தனிமையின் உறைவிடமாகவும் ...தீபாவளி, பொங்கலுக்கு மட்டுமே வந்து தங்கிச்செல்ல உபயோகப்படும் உயர்தர விடுதியாகவும் மாறும் வாய்ப்பு அதிகம்..

௫) ஒரு வீடு அன்பினால் மட்டுமே முழுமை அடைகிறது....செங்கற்களால் அல்ல...குடிசை வீடாக இருந்தாலும் அதில் பெற்றோரின் அன்பும் பிள்ளைகளின் பாசமும் மட்டுமே அதை வீடாக என்ன வைக்கும்...இல்லையென்றால் அது ஒரு சொகுசு சிறை.

௬) எல்லோராலும் வீட்டின் முழு விலையை முழுதாக கொடுத்து விலைக்கு வாங்க இயலாது... வங்கி கடன் ஒன்றே இதற்கு சரியான தீர்வு...இந்நிலையில் மிக அதிக தொகை கொடுத்து வாங்கி அதை வேறு எங்கோ கட்டி பார்த்து ரசிப்பதை விட நாம் வாழும் இடத்தில வாங்கினால் வாடகை பணமும் , ஊருக்கு சென்றுவரும் அலைச்சலும் மிச்சமாகி , பெற்றோரும் நம்முடன் இருக்கும் திருப்தியாவது கிடைக்கும்...

௭) யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மனநிலை இருப்பது நல்லது... எல்லோருக்கும் சொந்த ஊர் பாசம் இருக்கும்... இருந்தாலும்

எது நமக்கு மன நிறைவையும் சந்தோசத்தையும் அளிக்கிறது என்பதையும் சிந்திக்க வேண்டும்...









இது எல்லாவற்றையும் மனதில் ஒருமுறை ஒட்டிப்பார்துவிட்டு அடுத்த விசயத்திற்கு வருவோம்...





தற்பொழுது வேலை பார்க்கும் இடத்தின் அருகில் கட்டும் போது அது நம்பகமான இடமாக இருப்பது அவசியம்....தமிழ் நாட்டில் வாங்கும்போதே பல தில்லுமுல்லு இருக்கும் இதில் வேற்று மாநிலத்தில் வாங்குவது பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்று நினைப்பவர்கள் சிறந்த வக்கீல்கள் அல்லது ஆலோசகர்களிடம் நிலப்பத்திர பதிவுகளுடன் தீர விசாரிப்பது நல்லது...





வீடு கட்டுவது பற்றி மேலும் அதிகமான விவரங்கள் இனி வரும் பதிவுகளில் காணலாம்...இதற்கிடையில் வீடு கட்டுவது பற்றிய சில அடிப்படை விசயங்களை நீங்கள் இங்கே உள்ள சுட்டியில் உள்ள வலைபதிவில் தெரிந்து கொள்ளலாம்..


http://www.a2ztamilnadu.com/tamilnews/home-construction-budget-in-tamilnadu/













Share/Bookmark